இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி(27) என்ற பெண்ணை சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற சிவகுமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உணவு சமைக்காமல் செல்போன் உபயோகித்து கொண்டிருந்த சீதாவை சிவகுமார் கண்டித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் சிவகுமார் வெளியே சென்றுவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்து சீதாலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிவகுமார் கணவன் மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சீதாலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.