உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றது.
உக்ரைன் நாட்டிலுள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் போன்ற நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோபின் கிரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலுள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து விவாதித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்துள்ளது. அப்பொழுது ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைகளில் ரஷ்யாவால் கொண்டுவரப்பட்ட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது மற்றும் உக்ரேனிலிருந்து ரஷ்யா உடனடியாக ராணுவ படைகளை வாபஸ் பெறுமாறு அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்த கண்டன தீர்மானத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்க மறுக்க வேண்டும் என்று ரஷ்ய கூறியுள்ளது. மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினருக்கு கண்டனம் தெரிவிப்பது முன்னெனப்போதும் இல்லாதது என்று ரஷ்யா பிரதிநிதி கூறியுள்ளார். ஆகவே இந்த கண்டன தீர்மானத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தின் நிராகரித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பத்து நாடுகள் வாக்களித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்களிப்பதிலிருந்து விலகியுள்ளது. மேலும் இந்தியா உள்ளிட்ட நாலு நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.
இதனை அடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற ரஷ்யா தடை கொண்டு வந்தால் இந்த கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா பொது சபையில் உலக நாடுகள் பங்கேற்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா நாட்டின் ஆதரவு ரஷ்யாவுக்கு கிடைக்காததை மேற்கத்திய நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. மேலும் ஐ.நா பொது சபையின் வாக்கெடுப்பு மூலம் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா இப்போது முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.