பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, காவல்துறை ஆய்வாளர் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் கையெறி குண்டு வீசப்படும் எனவும் காவல்துறை எங்களுக்கு எதிரே இல்லை, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பொள்ளாச்சியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியும் முடிக்கு விடப்படுள்ளது. மேலும் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.