சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இது குறித்த புகைப்படத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றது.
#Prince wrapped up with a song shoot. Meet you all in theatres this Diwali 💥@Siva_Kartikeyan @anudeepfilm @maria_ryab @manojdft @Cinemainmygenes #Sathyaraj @Premgiamaren @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas @AdityaTamil_ #Prince #PrinceFromDiwali2022 pic.twitter.com/d4vHeqFD5j
— Shanthi Talkies (@ShanthiTalkies) September 30, 2022