திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.