Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவின் 6-ஆம் நாள்….. மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தசரா 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவிய ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

Categories

Tech |