Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு சேவையா?….. இனி ஜாலியா போகலாம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதனால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் “யுவர் பிளாட் ஃபார்ம் ” என்னும் மாதாந்திர இதழ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி சென்னை-மைசூர், சென்னை- கோவை, சென்னை -பெங்களூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ஆகிய ரயில்களில் இந்த மாதாந்திர இதழ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த இதழ்களை படித்து முடித்துவிட்டு ரயிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |