உலகம் முழுவதும் அதிக அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் நன்மைகள் போலவே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் twitter செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது ட்விட்டர் செயலியானது உலக தலைவர்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பலதரப்பட்டவர்கள் பயன்படுத்தும் செயலியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த செயலியின் மூலம் பயணிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்றாகும் மிகவும் வலிமை வாய்ந்தவர்களின் கருத்துக்கள் அதிக வேகத்தில் இதில் பரவிவிடும் பிரபலமான செயலியாக ட்விட்டர் இருக்கிறது. புதிய அறிவிப்பின்படி twitter ப்ளூ பயனர்கள் மட்டும் தற்போதைக்கு தங்களது ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை பெறுகின்றார்கள் எனவும் இந்த ட்விட்டர் ப்ளூவை பயன்படுத்த பயனர்கள் வெளிநாடுகளில் 4.99$ அதாவது இந்திய மதிப்பில் 47.12 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.