பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் இருக்கும் அன்பு நகரைச் சோ்ந்தவா் மருதையா. இவரின் 32 வயதான மகள் ராஜலட்சுமி அங்குள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகின்றார். ராஜலட்சுமிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூா் பகுதியில் உள்ள காட்டுக்கோட்டகையைச் சோ்ந்த ராஜதுரை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகிய சில நாட்களிலே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து , 2016 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.
பின்னர் ராஜலட்சுமி தனது தாய் தீபஜோதியுடன் வசித்து வந்தாா். இதைத்தொடர்ந்து ராஜலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகக் சொல்லப்படுகின்றது. மேலும் உடல்நலகுறைவால் வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூா் போலீஸாா் ராஜலட்சுமி உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் தற்கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர். ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.