பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ அமெரிக்கா சென்றிருக்கிறார். அவர் ஐநா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியையும் சந்தித்துள்ளார்.
இதற்கிடையே இந்த பயணத்தின் போது தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிலாவல் பூட்டோ பேட்டியளித்துள்ளார். அப்போது வெள்ள பாதிப்பு நிலவரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர் எங்கள் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் இருக்கிறது 7 ல் ஒரு நபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட வேண்டுமென நீங்கள் கூறினால் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.