விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம் தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. மேலும் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2500 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்நிலையில் தினந்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பைபாஸில் உள்ள பனிமலை ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்று மாலையில் இருந்து தொடங்கப்பட்டது. மேலும் இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவனந்தபுரம், தென்காசி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.