மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் இந்த கியாஸ்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்குவீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இனி ஆண்டிற்கு அதிகபட்சம் 15 சிலிண்டர்கள் (மாதத்துக்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்) மட்டுமே வாங்க முடியும். மானிய விலையில் பெறும் பயனாளிகளுக்கு அதிகபட்சம் 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். சிலிண்டர்களை மக்கள் வெளிச்சந்தையில் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.