அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் செய்த அடுத்த நாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படை கொரியா எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்று பரிசோதனை செய்தது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஷ் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் என்று அதிகாலை சியோல் சென்றடைந்துள்ளார்.
கமலா ஹாரிஸ் இன்று வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளை பிரிக்கும் எல்லை பகுதிகளை பார்வையிட்டுள்ளார். அதன் பின்பு வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து தென்கொரியா அதிபர் யூன் சுக்-யோல் உடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வடகொரியாவின் ஏவுகணை சோதனை நிலையற்ற தன்மையை உருவாக்குகின்றது என்று வடகொரியா முன்னென போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்போது வரை முப்பதுக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.