Categories
அரசியல் மாநில செய்திகள்

விஞ்ஞானி செல்லூர் ராஜு போல…! அமைச்சர் செந்தில் பாலாஜி… நோஸ்கட் செய்த மாஜி நிர்வாகி ..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, விக்கின்ற விலைவாசியில், தமிழகத்தின் நிலைமையில், கழுத்துல செயின் போட்டு போக முடியாது, கைல போன் எடுத்துட்டு போக முடியாது, ராத்திரி வெளியில போக முடியாது, விடிய காலைல வாக்கிங் போக முடியாது. அப்பேர்பட்ட ஒரு விடியல் ஆட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒன்று மின்சாரமே இருக்காது, இப்ப கொஞ்சம் மாறி..

மின்சாரம் இல்லாதது போக.. மின்சாரம் என்று சொன்னாலே மயக்கம் வரக்கூடிய அளவுக்கு… ஷாக் அடிக்கக்கூடிய அளவுக்கு வரப்போற பில்லை நினைச்சா ? தான் கவலையா இருக்கு. நம்மகிட்ட இருந்து போய் துரோக கூட்டத்துல இருக்காரு. ஒரு விஞ்ஞானி செல்லூர் ராஜு, தர்மாகோலை போட்டு தண்ணிய தடுத்து நிறுத்துகிறேன் என்று சொன்னாரே..

அந்த மாதிரி தான் இன்னைக்கு செந்தில் பாலாஜி சொல்றதும் இருக்கு. அணிலால கரண்ட் கட் ஆயிடுச்சா? இன்னைக்கு சொல்றாரு திமுகல…  தங்க தாலி திட்டம் எதுக்கு? அது யாருக்குமே போய் சேரலைன்னு ?  சமூக நல வாரிய தலைவரா மூன்று முறை அம்மாவோட ஆட்சியில் இருந்தவர் நான்.. எங்க துறையில் தான் அந்த தங்கத் தாலி திட்டமே வந்தது. எத்தனை ஏழை பெண்கள் அதனால் பலன் அடைந்தார்கள் தெரியுமா ? மக்களுக்காக செய்யத்தான் ஒரு அரசே தவிர,  மக்களை பாடாய்படுத்த இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |