அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, உங்களை யாருங்க ஓசில பஸ் விட சொன்னது, மக்களா கேட்டாங்க? என்ன நக்கல் பேச்சு ? ஓசிலதான போறீங்க.. நான் கேட்கிறேன், மரியாதைக்குரிய அமைச்சர் பொன்முடி அவர்களே… நீங்க போற காருக்கு பெட்ரோல் நீங்களா போடுகிறீர்கள?
நீங்கள் குடி இருக்கிற கவர்மெண்ட் வீட்டுக்கு நீங்களா வாடகை கொடுக்கிறீர்க ? உங்க PA, OAக்கு உங்க சொந்த காசுலயா சம்பளம் கொடுக்குறீங்க? யார் கொடுக்குறாங்க, மக்களுடைய வரிப்பணம் தான் இன்னைக்கு உங்களுடைய செலவு. நீங்களே ஓசியில் தான் வாழ்ந்துட்டு இருக்கீங்க, அமைச்சர் பொன்முடி அவர்களே… உங்களுடைய எல்லா செலவும் மக்களுடைய வரிப்பணம். நீங்களே ஓசி தானே.. அப்புறம் எப்படி மக்களை ஓசி என்று சொல்லுவீங்க ? அவங்க கேட்டாங்களா உங்ககிட்ட?
புலம்புறாரு பாவம்.. மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள்… என்னை தூங்க விடாம பண்ணிட்டீங்களே, என் உடம்ப பாருங்க நான் எப்படி ஆயிட்டேன்னு ? பொன்முடி சிரிக்கிறார். யோவ் நீ தூங்கலனா நான் என்ன பண்ண முடியும் ? உனக்கு உடம்பு சரியில்ல, தூக்கம் வரல அதுக்கு நானா பொறுப்பு ? அப்படின்ற மாதிரி சிரிக்குறாரு.
ஆயிரம் இருந்தாலும் அவரோட அப்பா காலத்துல இருந்தே பொன்முடி இருக்கலாம் அது வேற விஷயம். இன்னைக்கு அவரு அமைச்சராக இருக்கலாம் அது வேற விஷயம். கட்சியினுடைய தலைவர் பேசுகிறார்… இந்த நாட்டின் முதலமைச்சர் பேசுறாரு.. அதுக்கு கூடவா நீங்க மரியாதை கொடுக்க மாட்டீங்க. அப்படி ஒரு சிரிப்பு, சிரிக்கிறீங்களே…
விடியலாட்சி விடியலாச்சு னு சொல்லி என்னை விடிய விடிய தூங்காம பண்ணிட்டீங்களேப்பா என சொல்லி புலம்பி தள்ளுறாரு ஸ்டாலின். விடியலாட்சி யாருக்கோ ? என்னமோ தெரியல. எனக்கு விடிய மாட்டேங்குது, விடிஞ்சா தூக்கம் வரமாட்டேங்குது என்கிறது. யாரையும் ஒரு முதலமைச்சராக அவரால் கட்டுப்படுத்த முடியல என தெரிவித்தார்.