இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். சில வாரங்களில் அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையில் இயல்புநிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டிலிருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பியுள்ளார். இந்த சூழலில் இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளார். அதன்பின் மஹிந்த ராஜபக்சே வீட்டிற்கு சென்று சுப்பிரமணிய சுவாமி வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகிய பின் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆவர்.