11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிராகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர்களான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வாதங்கள் என்பது முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.
குறிப்பாக இந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். முறையாக அழைப்பு என்பது விடுக்க ப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இப்படி ஏராளமான விதிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில், அவை எதையுமே கணக்கில் கொள்ளாமல் சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி இந்த பொதுக்குழு என்பது கூட்டப்பட்டு இருக்கிறது.
எனவே பொதுக்குழு விஷயங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்கள் என்பது முன் வைக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒரு பத்து நிமிடங்களாக இந்த வாதங்கள் என்பது நடந்து கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் அடுத்ததாக இபிஎஸ் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் தனித்தனியாக வாதங்களை வைப்பதற்கும் வழக்கறிஞர்கள் தயாராக இருக்கிறார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் மேலாக வாதப்பிரதிவாதங்கள் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் இன்றைய தினம் ஏதேனும் முக்கியமான உத்தரவுகள் வருவதற்கான வாய்ப்பு என்பதும் இருக்கிறது. வெறுமென ஒத்தி வைப்பதற்கான வாய்ப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.