மைசூரு, யஸ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் நாலு மற்றும் 11 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக காலை 4.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும்.அதேபோல் தூத்துக்குடி மற்றும் மைசூர் சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக மைசூர் செல்லும்.
இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.