Categories
மாநில செய்திகள்

படிப்பை கைவிடும் தமிழக மாணவர்கள்….. அதுவும் எந்த வகுப்பில் தெரியுமா?….. ஷாக் ரிப்போர்ட்…..!!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது . அதனைப் போலவே தென்காசி,திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அடுத்ததாக திருப்பத்தூர்,பெரம்பலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன .

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதே சமயம் மக்கள் பொருளாதார நெருக்கடியும் சந்தித்து வந்ததால் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அப்படி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பல மாணவர்களும் தங்கள் படிப்பை ஓரம் கட்டி விட்டு வேற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனிடையே பள்ளிக்கல்வித்துறை படிப்பை கைவிடும் மாணவர்கள் குறித்து நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |