இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றுவதற்கு செல்போன் நம்பர் மிகவும் அவசியம் என்பதால் அதை புதுப்பிப்பது கட்டாயம். அதோடு ஓடிபி நம்பரும் மிகவும் அவசியம். இந்த ஓடிபி ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு மட்டுமே அனுப்பப்படும்.
இதனையடுத்து சமீபத்தில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு UIDAI ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி உங்களுடைய ஆதார் அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம். இது கட்டாயம் இல்லை என்றாலும் விருப்பமுள்ளவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்நிலையில் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக்ஸ் மற்றும் மக்கள் தொகை தொடர்பான 2 விதமான தகவல்கள் இருக்கிறது. இதில் பயோமெட்ரிக்சில் இமெயில் ஐடி, செல்போன் நம்பர், புகைப்படம், ஐரிஷ் ஸ்கேன் மற்றும் கைரேகை போன்ற விவரங்களும், மக்கள் தொகை விவரத்தில் பிறந்த தேதி, பாலினம், முகவரி, பெயர், கணவர் அல்லது தந்தை பெயர் போன்றவைகள் அடங்கும். அனைத்து தகவல்களையும் புதுப்பிப்பதற்கு வசதிகள் இருக்கிறது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். ஆனால் மக்கள் தொகையில் உள்ள விவரங்களை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் பிறந்த தேதி மற்றும் பாலினத்தை ஒருமுறை மட்டுமே புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு ரூபாய் 100 கட்டணமும், டெமோகிராஃபிக் அப்டேட்டுக்கு ரூபாய் 50 கட்டணமும், இரண்டையும் ஒரே நேரத்தில் புதுப்பிப்பதற்கும் ரூபாய் 100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.