Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் அரணாக அதிமுக செயல்படும் – OPS , EPS கூட்டறிக்கை ..!!

சிறுபான்மை மக்களின் நம்பிக்கை அரணாக அதிமுக அரசு விளங்கும் என்று OPS , EPS கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறுபான்மை மக்களுடைய பாதுகாப்பு அரணாக அதிமுக விளங்கும் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக அறிக்கை மூலமாக தெளிவு படுத்தி இருக்கின்றார்கள்.

குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை பல்வேறு நன்மைகளை செய்து அதிமுக அரசு விளங்குவதாகவும் , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் , புதிய அறிவிப்புகளையும் கொடுத்து வருவதை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய திமுக விஷம பிரசாரத்தை பரப்பி வருவதாகவும் இந்த அறிக்கை மூலமாக தெரிவித்திருக்கின்றன.

 

குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பை பொருத்தவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்க கூடிய  மத்திய அரசு 1872 ஆம் ஆண்டிலிருந்து இதனை நடைமுறை வைத்திருக்கிறது. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 10 ஆண்டுக்கு ஒரு முறை இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கடைப்பிடிக்கிறது.

அதனடிப்படையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2003ஆம் ஆண்டு மத்தியில் திமுக – காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த போது இந்த மக்கள் தொகை பதிவேட்டில் சிறு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

மேலும் அதிமுக அரசு இஸ்லாமிய மக்களுக்கு கொண்டுவந்த திட்டங்கள் , அறிவிப்புகளை அறிக்கை மூலமாக  முதல்வர் , துணை முதல்வர் தெளிவு படுத்தியுள்ளனர்.

Categories

Tech |