நவராத்திரி நாட்களில் நாம் லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை உச்சரித்தால் நல்லது நடக்கும். ஆனால் அனைவராலும் இப்படி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க முடியாது என்பதால் அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி:
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
பலன்கள்:
இந்த மந்திரத்தை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமமாகும். இந்த ஏழு நாமாக்கள் பல அதிசயங்களை நிகழ்த்தும் என்பது முன்னோர் கூறியுள்ளனர். இந்த மந்திர உச்சரிப்பானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களது நியாயமான எண்ணங்கள் நிறைவேற அன்னை லலிதாம்பிகை அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். நலம் அனைத்தும் தந்தருளும் நவராத்திரி நாட்களில் குடும்பமாக வீட்டுக்கு வருவோரை அன்போடு உபசரித்தால் ஆசீரவாதங்கள் கிட்டும்.