Categories
தேசிய செய்திகள்

இனி இப்படி செய்தால் ஓராண்டு சிறை தண்டனை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, போலி அடையாளங்களை (ஃபேக் ஐடி) கொண்டு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் ஓராண்டு சிறை மற்றும் 550,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், போலி ஆவணங்களை வைத்து மொபைல் சிம் வாங்கினால் சிறை தண்டணை மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய மசோதா பொது தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |