பத்தினம்திட்டா மாவட்டத்தில் தேவகி மடத்தை அரசியல் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி, மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி தேவகியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தின் இலந்தூர் பகுதியில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்து, மாந்திரீக முறைப்படி சில விஷயங்களை செய்து, அந்த பெண்களுடைய உடல்களை துண்டு துண்டாக வெட்டி, புதைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மலையாலப் புழா என்ற இடத்தில் இருக்கக்கூடிய வாஸந்தி அம்மா மடம் என்கின்ற மடத்தை, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இன்று காலையிலே ஒன்று கூடி, கோஷங்களை எழுப்பி, மடத்தை அடித்து உடைத்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மடத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்மணியை தற்போது போலீஸ் கஸ்டடியில் எடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது. இந்த பகுதியில் குழந்தைகள் முதல் வயதானவரையும் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, இங்கு வந்து பேய் ஓட்டுவதாக கூறியும், மற்ற சில விஷயங்களுக்காகவும் அவர்களுக்கு மாந்திரீக முறைப்படி மந்திரங்கள் செய்து,
பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தி, இந்த பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் புகார்கள் அவ்வப்போது எழுந்திருக்கிறது. இது குறித்து காவல் நிலையத்திலும் பலமுறை இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அது குறித்தான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத ஒரு நிலையில், இளந்தூர் சம்பவம் எதிரொலியாக தற்போது இன்று காலை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்று கூடி இந்த மடத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, அந்த மடத்தை அடித்து, உடைத்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.