தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஏதாவது ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி. மேட்டுப்பட்டி, கரடிகல், மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத் தூர், டி. மேட்டுப்பட்டி, கரடி கல், மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு, பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான்நகர், வி. எஸ். நகர், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் மேற்கொள்வதால் இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை பிஸ்மிநகர், கானா விலக்கு, குன்னூர், இந்திரா நகர், ரங்கசமுத்திரம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.
தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி , போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி , தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி , தம்மிநாயக்கன்பட்டி , தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி , ஓவுலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
திண்டுக்கல்
ஆத்தூர் வட்டாரத்தில் ரெட்டியார்பட்டி, அச்சாம்பட்டி, கன்னிவாடி, தெத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, வெள்ளமடத்துப்பட்டி, கருப்பன் சேர்வை காரன்பட்டி ஆகிய பகுதிகளில் 30. 09. 2022 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நத்தம் உபகோட்டத்திற்குட்பட்ட நத்தம், செந்துறை, வே. குரும்பபட்டி துணையின் நிலையங்களில் இருந்து செல்லும் மின்பாதைகள் இன்று (30. 09. 2022)வெள்ளிக்கிழமை காலை 10. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் குடகிப்பட்டி, மணக்காட்டூர். கே. புதூர், பழனிபட்டி, மேற்குபட்டி, கோபால்பட்டி, அய்யாபட்டி, செடிப்பட்டி, கோம்பைபட்டி, பெருமாள்கோவில்பட்டி, கணவாய்பட்டி, கே. குரும்பபட்டி கொரசின்னம்பட்டி, கோட்டைக்காரன்பட்டி, சக்கிலியான்கொடை, எரமநாயக்கன்பட்டி, இராவுத்தம்பட்டி, பெரிய முளையூர் சின்ன முளையூர் – லி. மலையூர், மாரியம்மன்கோவில் பகுதி, காந்திநகர், கோவில்பட்டி வடக்கு, கோவில்பட்டி தெற்கு, கொண்டையம்பட்டி, அசேபா பால்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது .