Categories
அரசியல் மாநில செய்திகள்

ஞாயமே இல்லாம பேசுறாங்க…! கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல… ஈ பிஎஸ் கோஷ்டிக்கு மூளை கிடையாது… போட்டு தாக்கிய புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான்.

இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து,  சுபாஷ்,  ராமா,  கோவிந்தா என யாரோ ஒருத்தர்  எப்படி  டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க முடியும். அதிமுக  ஆபீஸ் இன்னொருத்தர் பெயரில் ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துற முடியுமா? அன்னைக்கு போட்டோ இல்லாம கொடுக்கப்பட்டது, நாடறிந்த உண்மை. உதாரணமாக செல்போன் திருட்டு போயிருச்சு. எடுத்துட்டு போய் இதோட விலை 15,000, 20,000என வெச்சுக்கோங்க.

இதனை  திருடிட்டு போய் 5000 ரூபாய்க்கு விற்க முடியும். ஆனால் அதிமுக அலுவலக டாக்குமெண்ட்ட எடுத்துட்டு போய் என்ன பண்ண முடியும் ? அவங்க பெயர்ல மாத்திக்க முடியுமா? இல்ல அத அடகு வைக்க முடியுமா? இல்ல அதை மறைத்து விட்டு, அது என்னதுன்னு சொல்ல முடியுமா? இதில் ஒரு ஞாயமே இல்ல. அவுங்களுக்கு (எடப்பாடி தரப்புக்கு) சென்ஸ் இல்ல, மூளை கிடையாது. அதனால ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க சண்முகமும்,  ஜெயக்குமார் போன்றவர்கள்.

அந்த டாக்குமெண்ட் வச்சுட்டு என்ன பண்றது ? ஒரு சமயம் ஜெராக்ஸ் இருந்து இருக்கலாம், அதை திரும்பி கொடுத்திருக்கலாம். ஆனால் என்னுக்கு தெரிந்த அளவில் அது கொடுக்கப்பட்டது….  புரட்சித்தலைவி அம்மா கிட்ட ஜானகி அம்மையார் ஒப்படைச்சிருக்காங்க. அது அம்மா கிட்ட தான் பத்திரமா இருந்திருக்கும். எங்க ஆபீஸ்ல இருக்க வாய்ப்பு இல்லை, என்றது என்னோட கருத்து என தெரிவித்தார்.

Categories

Tech |