ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும்.
பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் அக்., 1 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.