Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொட்டகையில் திடீர் தீ விபத்து….. தீயில் கருகிய 30 ஆடுகள்….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டு கொட்டகைக்கு அருகே இருந்த வைக்கோல் போரில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ கொட்டகையில் வேகமாக பரவியதால் 30 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொட்டகையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் மூன்று சைக்கிள்கள் ஏரிந்த நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |