Categories
தேசிய செய்திகள்

சிறைக்கு சென்ற தாய்…. மகள்களை பல மாதங்களாக…. தந்தையின் லீலைகளை அம்பலபடுத்திய பக்கத்து வீட்டுக்காரர்….!!!!

பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த ஒவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் 2 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் தனது மனைவி இல்லாத இந்த நேரத்தில் பெற்ற மகள் அதுவும் சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். அவர்கள் மறுப்பு தெரிவித்தால் கட்டயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இப்படியே ஒவ்வொருமுறையும் நடக்க, சம்பவத்தன்று தந்தை அந்த சிறுமிகளுக்கு செய்யும் கொடுமையை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் கண்டுள்ளார். முதலில் தான் தவறாக புரிந்து விட்டோம் என்று எண்ணிய அவர், மறுநாளும் இவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதை பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அந்த சிறுமியிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது தனது தாய் சிறைக்கு சென்ற பிறகு தங்களுக்கு தினமும் நடக்கும் கொடுமைகளை அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். மேலும் தனது தங்கைக்கும், தனது தந்தை இதுபோன்று பாலியல் வன்கொடுமையை செய்து வருவதாக அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தந்தை சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவரது சகோதரன் ஆகிய மூன்று போரையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Categories

Tech |