செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட, பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது.
பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு போட ஆரம்பிச்சிருக்காங்க. எத்தனை நாளைக்கு பாதுகாப்பு போட்டுட்டே இருப்பீங்க ? நமக்கு தெரியும். ஒரு இயக்கம் தீவிரவாத கொள்கை மூலமாகத்தான் அந்த இயக்கம் தமிழகத்தில் வளர வேண்டும் என்று நினைத்தால், அந்த இயக்கத்திற்கு தமிழக மண்ணில் இடமில்லை என்பது என்னுடைய கருத்து. அதற்கு மாநில அரசு, யாரெல்லாம் தவறு செய்கின்றார்களோ, அவர்கள் மீது முன் ஜாக்கிரதை நடவடிக்கை வேகமாக எடுக்க வேண்டும், அது முக்கியம்.
அதாவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது சட்ட ஒழுங்கில் இருக்கக்கூடாது. மத்ததெல்லாம் பரவாயில்ல. சட்ட ஒழுங்கில் ஒருமுறை தவறு நடந்துவிட்டால், திரும்ப அந்த உயிரையோ, பொருளையோ கொண்டு வருவது மிகவும் கடினம். அதனால் மாநில அரசு இன்னும் அதிகப்படியாக, இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாக யாரெல்லாம் தவறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது…. அந்தந்த பகுதிகளில் என்பது, உள்ளே இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியும். ஏன்னா தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது என தெரிவித்தார்.