Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. பிரபல ராப் பாடகர் கூலியோ மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

அமெரிக்க ராப் பாடகர் கூலியோ உயிரிழந்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் ராப் பாடகர் கூலியோ. தனது 59-வது வயதில் உயிரிழந்துள்ளார். கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ், ஃபென்டாஸ்டிக் வோயேஜ் போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் கூலியோ. ஆர்டிஸ் லியோன் ஐவி ஜூனியர் என்ற இயற்பெயர் கொண்டவர் கூலியோ. ராப் பாடகராக வலம் வந்த கூலியோ, கடந்த 1996-ஆம் ஆண்டு கிராமி விருதை வென்றார். தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கூலியோ பெற்றிருக்கின்றார்.

கடந்த 1994-ஆம் ஆண்டு கூலியோ அளித்த பேட்டி ஒன்றில், தான் போதைப்பொருளுக்கு அடிமையானதாகவும், அதிலிருந்து மீண்டு வர தீயணைப்பு வீரராக வேலை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் கூலியோ தனது நண்பர் வீட்டின் குளியறையில் சுயநினைவின்றி கிடந்ததாகவும், பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். ஆனால் கூலியோவின் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ராப்பர் கூலியோவின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |