இலங்கையில் கொழும்பு அருகே உள்ள கஜினி மாவட்டத்தில் சுமார் 300 வீடுகள் அமைந்துள்ளது. இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டவை ஆகும். இந்த பகுதியில் பெரும்பாலும் தின கூலிகள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இங்குள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி போதை பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்போது நேற்று இரவு அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தீ மளமளவென பரவி மற்ற வீடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் 10 பேர் வரை காயமடைந்ததாக கூறப்படுகிறது தீ விபத்து காரணமாக உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரிக்கும்படி அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.