Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊடக நண்பர்களோடு கலந்து உரையாடிய சரத்குமார்”….. பொன்னியின் செல்வன் குறித்து ஓபன் டாக்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நேற்று சரத்குமார் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்தனமும் லைகா ப்ரொடக்ஷனும் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். பல முன்னணி நடிகர்களை ஒருங்கிணைத்து இப்படத்தை சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும் கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்தினம் அதை சுருக்கி ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றார்.

இத்திரைப்படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மணிரத்தினத்துடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என நினைக்கிறேன். வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்த எங்களை இனிமேல் பார்ப்பீர்கள் என நம்புகின்றேன். சோழர்கள் யார் என தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட படத்திற்கு பிறகு தெரியும். இந்தியாவில் தாஜ்மஹாலை பார்க்க வரும் மக்கள் இனி தஞ்சை பெரிய கோவலையும் வந்து பார்க்க வேண்டும். இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த லைகா ப்ரொடக்ஷனுக்கும் மெட்ராஸ் டாக்கிஸ்க்கும் நன்றி.

பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்பொழுது பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யார் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவ்வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி. இந்த வேடத்தில் ரஜினி நடிக்க விரும்பியதை நான் பெருமையாக கருதுகின்றேன். அவர் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் நன்றாகவே இருந்திருக்கும். தற்போது நான் வில்லனாக நடிப்பது குறித்து கேட்கின்றார்கள். ஹீரோ, வில்லன், அப்பா, அண்ணன் உள்ளிட்ட எல்லாம் கதாபாத்திரங்கள்தான். அதில் சிறப்பாக நடிப்பவர் தான் நடிகராக இருக்க முடியும். இந்த நிலையில் 21 படங்களுக்கு மேல் நடித்து வருகின்றேன். ஹீரோவாகவும் முதன்மை கதாபாத்திரமாகவும் வில்லனாகவும் என பல வேடத்தில் நடித்து வருகின்றேன். எப்பொழுதும் போல் படத்திற்கும் எனக்கும் ஆதரவு வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

Categories

Tech |