கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.