பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுத சம்பவம் சகபயணிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் லாரி ஓட்டுநர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிந்து தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் சக பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அளித்த பதில் சோகத்தை ஏற்படுத்தியது. உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் விபத்து நடந்ததை கூட அறியாமல் உறக்கத்திலேயே மரணமடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து எந்த ஒரு சத்தமும் வரவில்லை என சக பயணிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் மகனை பறிகொடுத்த தாய் ஒருவர் அம்மாவை பார்க்க வரேன்னு சொன்னியே டா… ஏண்டா வரல.. திரும்பி வந்துருடா… என்னும் அழுகுரல் அனைவரது நெஞ்சையும் உலுக்கியது