Intel innovation day நிகழ்வை ஒட்டி intel, சிஇஒ பேட் கெல்சிங்கர் மற்றும் Samsung நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஎஸ் சோய் ஆகியோர் இணைந்து ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ அறிமுகம் செய்துள்ளனர். உலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 17 இன்ச் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப் மாடலில், ஸ்லைடபில் டிஸ்ப்ளேவை ஜன்னல் போன்று பக்கவாட்டு பகுதியில் திறக்க முடியும். கடந்த ஆண்டு Samsung நிறுவனம் ஸ்மார்ட்போனில் சிறிய அளவில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்திய நிலையில், அகலமான மற்றும் செங்குத்தான ஸ்லைடபில் போர்டபில் ப்ரோடோடைப்களை 2022 மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே எதிர்கால கணினிக்கான தலைசிறந்த எடுத்துக் காட்டு தான் என ஜெஎஸ் சோய் தெரிவித்தார். முன்னதாக அசுஸ் நிறுவனம் சென்புக் 17 போல்டு OLED மடிக்கக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து, விற்பனை விரைவில் துவங்கவிருக்கிறது. Intel மற்றும் Samsung தரப்பில் ஸ்லைடபில் டிஸ்ப்ளே மாடல் வர்த்தக பயன்பாட்டுக்காக எப்போது அறிமுகம் செய்யப்படும் என இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது எதிர்காலத்தில் விற்பனைக்கும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.