திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைப் போலவே அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது கேப்ஷனில் பாடலுக்கு அமோக வரவேற்பு அளித்ததற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். மேகம் கருக்காதா பாடலின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த பாடலின் பிடிஎஸ் வீடியோவும் பலரை வெகுவாக கவர்ந்திருக்கிறது..
Categories
மேகம் கருக்காதா பாடலின்… மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்…!!!!
