Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கொடுமையே! பார்த்திபனுக்கு இன்னும் அது கிடைக்கலையாம்…. டுவீட்‌ பதிவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பொன்னியின் செல்வன் பட குழு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சென்று படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளது. இந்த நிலையில் சின்ன பழுவேட்டையராக நடித்திருக்கும் பார்த்திபன் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நற்பொழுதாக நாளை திரையில் வரும் முன் இன்று நேரலையில் 3pm வருகிறேன். பி.கு:பொ.செ-க்கு எனக்கே இன்னும் டிக்கெட் கிடைக்கல என கூறியுள்ளார்.

 

 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஒருவருக்கே டிக்கெட் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் அலுவலகம் செல்வோர் நாளை அதிகாலை காட்சியை பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து வைத்திருக்கின்றார்கள் மணிரத்தினத்தின் மீதான நம்பிக்கையில் பலரும் படம் பார்க்க ஆவலுடன் இருக்கின்றார்கள். விளம்பர நிகழ்ச்சிகளின் போது தஞ்சை பெரிய கோயிலின் மகிமையை பற்றி விக்ரம் பேசி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்து இருக்கிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது அதன் பின் தஞ்சை கோவிலை பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |