Categories
சினிமா தமிழ் சினிமா

எந்த புது போன் வாங்கினாலும்….. போலீஸ் எடுத்துக்கிறாங்க….! குமுறிய பிரபல நடிகர்….!!!!!

நடிகர் திலீப் தற்போது அருண் கோபி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. டினோ மோரியா உட்பட ஐந்து பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். திரைக்கதை உதயகிருஷ்ணா. இப்படத்தை அஜித் விநாயக் பிலிம்ஸ் பேனரில் விநாயக் அஜித் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் திலீப் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பேசினார். அப்போது புது போன் வெளியானால் பல செல்போன் நிறுவனங்களும் தன்னை அழைக்கின்றனர். நான் அதிகமாக செல்போன்களை வாங்குவது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஏனென்றால் எந்த ஐபோன் வாங்கினாலும் அதனை போலீசார் கொண்டு செல்கின்றனர். கடைசியாக நான் ஐபோன் 13 ப்ரோவை வாங்கினேன். அதுவும் என் கையை விட்டுப் போனது. இப்போது 14 ப்ரோவை வாங்கலாம் என்று இருக்கிறேன் அதையும் போலீசார் கொண்டு செல்லக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். பிரபல நடிகை பாலியல் வழக்கில் விசாரணை வளையத்திற்குள் நடிகர் திலீப் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |