Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!….. உடனே விரைந்து இதனை செய்யுங்கள்….. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளத. ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.அதன்படி வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ரூ. 391, மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 289, சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.123, கம்பு பயிருக்கு ரூ.145, பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.209, பருத்தி பயிருக்கு ரூ.469, நிலக்கடலை பயிருக்கு ரூ.303, எள் பயிருக்கு ரூ.116, சூரியகாந்தி பயிருக்கு ரூ.186, கரும்பு பயிருக்கு ரூ.2729 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைப்போல தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.572, மிளகாய் பயிருக்கு ரூ.1012, வெங்காயம் பயிருக்கு ரூ.1712, வாழை பயிருக்கு ரூ.3426 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பெற பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு நவம்பர் 15 ஆம் தேதி , மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி, சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு டிசம்பர் 15ஆம் தேதி, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி, எள் பயிருக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மற்றும் கரும்புக்கு மார்ச் 31 ஆம் தேதி என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதனைப்போல தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி மற்றும் மிளகாய் பயிர்களுக்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, வெங்காயம் மற்றும் வாழை பயிர்களுக்கு 2023 ஜனவரி 31 ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்ற இணைத்து கட்டண தொகை செலுத்திய பின் அதற்கான ரசிதையும் பொது சேவை மையங்கள் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களின் பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடு அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி தங்கள் பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |