Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனா இடையே சுமுக உறவு காணப்படுகிறது”… ஆனால்.. மத்திய வெளியுறவு மந்திரி பேட்டி…!!!!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளி விவகார மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது சபையின் உயர் மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதன்பின் அந்த நாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி லிங்கன் மற்றும் அதிபர் பிரைடல் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயர் அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இதே போல் பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும் மத்திய மந்திரி ஜெயசங்கர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பல்வேறு காரணங்களுக்கான சர்வதேச சூழ்நிலை மிகவும் சவாலாக இருக்கின்ற நிலையில் இந்தோ பசுபிக்கின் ஸ்திரத்தன்மை பாதுகாப்பு மற்றும் பலம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பெண்டகனில் ஆற்றிய  உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வாஷிங்டனின் சீனா மற்றும் இந்தியா இடையேயான சீரான உறவுகள் பற்றி கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து பேசிய மத்திய மந்திரி சீனாவுடனான உறவை தொடர நாங்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அது பரஸ்பர உணர்திறன், பரஸ்பரம் மரியாதை மற்றும் பரஸ்பர விருப்பம் போன்றவற்றின் அடிப்படையிலே கட்டமைக்கப்படும் என வலியுறுத்தி கூறியுள்ளார். எனினும் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் பேசும்போது இந்திய சீன எல்லைப் பகுதியில் நிலைமை ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் 2020 ஆம் வருடம் ஜூனில் ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் இருதரப்பினரும் அவசர கால நிலையில் இருந்து விலகி சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய ஜெய்சங்கர் ஒரு வெளிநாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஏதோ ஒரு விஷயம் கூறுகிறார் என்றால் அதற்கு அந்த நாட்டுடன் தொடர்புடைய நாட்டின் வெளிநாட்டு அமைச்சது செய்து தொடர்பாளர் என்ன கூறுகிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பதிலிருக்கிறார். இதனால் இந்தியா சீனா இடையே சுமூக உறவு காணப்படுகிறது என்ற சீனாவின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே மத்திய மந்திரி தெளிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |