பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு சீனர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார் மற்ற இரண்டு பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கராச்சியில் உள்ள கராச்சி பல்கலைக்கழகத்தின் வளாகப் பகுதியில் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் சீன மொழி பயிற்சிவிக்கும் மையத்தின் இயக்குனர் உட்பட மூன்று சீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் கைபர் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் சீனாவை சேர்ந்த 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை முன்னிட்டு சீனர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடங்களுக்கு செல்வதற்கு முன் போலீசாரிடம் அது பற்றிய விவரங்களை கூறிவிட்டு செல்லும்படி இஸ்லாமாபாத் நகர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் பாகிஸ்தானில் தொடர்ந்து அடுத்தடுத்து தாக்குதல் நடந்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் மற்றும் தளவாடங்கள் கொண்ட வெளிநாட்டு பாதுகாப்பு பிரிவு ஒன்று மத்திய காவல் அலுவலகத்தில் அமைக்க இஸ்லாமிய போலீஸ் முடிவு செய்து இருக்கிறது.