Categories
Tech டெக்னாலஜி

AIRTEL வாடிக்கையாளர்களே!…. இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும் சூப்பர் திட்டங்கள்…. மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தவை சற்று கூடுதல் கட்டணத்துடன் இலவசமாக கொடுக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவுடன் 5 prepaid திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 3 மாத சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் 1 வருட சந்தா என 2 வகைகளாக பிரிக்கப்படுகிறது.

இதில் 3 மாத டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவில் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி‌ டேட்டா கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் பலன் 28 நாட்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு 839 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனையடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் 1 வருட சந்தாவில் 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதன் பிறகு 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா கிடைக்கும். இதைத்தொடர்ந்து 3359 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் ஏப்ரல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 4 post paid திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி 499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங் உடன் 75 ஜிபி டேட்டா கிடைக்கும். அதன் பின் 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச அழைப்புகள் ,  எஸ்டிடி அழைப்புகள் தேசிய ரோமிங் உடன் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனையடுத்து 1199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2 மாதத்திற்கு 150 ஜிபி டேட்டாவுடன் இலவச உள்ளூர், எஸ்டிடி அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங்கும், 1599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2 மாதத்திற்கு 250 ஜிபி டேட்டாவுடன் இலவச உள்ளூர், எஸ்டிடி அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங்க் கிடைக்கிறது.

Categories

Tech |