சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்தார். அதில், மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக வாட்ஸ் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாக அவர்கள், பஸ் நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் இந்த திட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இலவசமாக பெண்கள் பயணிப்பது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இல்லாத திட்டமாக பெண்களை தர குறைவாக நடத்தக்கூடாது என்ற அரசு ஓட்டுநர் நடத்தினர்களுக்கு மேலான இயக்குனர் கீழே மேலாளர்களின் மூலம் அறிவுரை வழங்குவார்கள். இதனையடுத்து பஸ் டிக்கெட் கட்டணம் ஏறவே ஏறாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை ஏறும்போது எல்லாம் பஸ் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. சில மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்களை கட்டணத்தை உயர்த்திக் கொள்கிறது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கட்டண விகிதமே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.