தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் நடிகை ராஸ்மிகாவை சந்தித்த இளம் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என கேட்க அவரும் மறக்காமல் செல்பி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது மார்பில் ஆட்டோகிராப் வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். முதலில் அதிர்ச்சியான ராஷ்மிகா அதன் பிறகு அவரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.