செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்.. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க.
ஆர்.பி உதயகுமார் நான் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என சொல்றாரு. அப்போது தென்காசியில் உள்ள ஒரு அதிமுக ( ஓபிஎஸ் ) ஆதரவாளர் தற்கொலை பண்ணிக்க இங்க வாங்க, நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிக்கிறேன் என சொல்லி பேசுனந்தரு. உடனே அங்க இருந்த போலீஸ்காரனுக்கு வீரம் வந்துருச்சு. உடனே அந்த மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி அவனை தேடி புடிச்சு ஜெயிலுக்கு அனுப்பிச்சிங்க.
வீட்டை சூறையாடுவேன் என சொன்னாலும் போலீஸ் கண்டுக்காது, மாநிலத்தினுடைய டிஜிபி கோபாலபுரத்தில் மாவு ஆட்டுறாருன்னு சொன்னாலும் சிவி சண்முகத்தை நீங்க கண்டுக்க மாட்டீங்க. மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு… சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து, கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன் என விமர்சித்தார்.