தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்றிருந்த புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகின. அவருடன் ஏகே 61 திரைப்படத்தில் நடிக்கும் நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்து இருந்தார்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக யாருக்கும் நேர்காணல் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி மௌனம் காத்து வந்த அஜித், விகடனுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.எனக்குள் நான் செய்த பயணம் என்ற தலைப்பில் அவர் கொடுத்த இந்த நேர்காணல் இன்று ஆனந்த விகடன் இதழில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் மீண்டும் ஊடகத்தில் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.