Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for US President Trump's visit to India may be signing 5 agreements between India and US

இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில்,  அறிவுசார் சொத்துரிமை,  வர்த்தகம்,  உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட  5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்,  பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளும் அதிபர் டிரம்ப் -பிரதமர் மோடி சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |