Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvENG : திக் திக் கடைசி ஓவர்….. “த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்”…. 3-2 என்ற கணக்கில் முன்னிலை..!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது..

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்று சமநிலையில் இருந்தது .

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மொயின் அலி பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் 9 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.. அதனைத் தொடர்ந்து வந்த பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போதிலும், மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 10 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லி மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.. இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 3 மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 1 என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.. அதன்பின் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர்..மேலும் டேவிட் மலான் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் இறங்கிய மொயின் அலி அரைசதம் அடித்து கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அமீர் ஜமால் அந்த கடைசி ஓவரில் சிறப்பாக வீசி 1 சிக்ஸர் உட்பட 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மொயின் அலி 37 பந்துகளில் 51 ரன்களுடனும், டேவிட் வில்லி 0 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 -2 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது..

கடைசி ஓவர் வீடியோ :

Categories

Tech |