இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் யாரும் உயிரிழந்துள்ளார்களா, பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.